தர்மேந்திர பிரதானின் சர்ச்சை பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Published on

மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்களை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக கூறி அந்த கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இதில் மும்மொழிக் கொள்கை பிரச்சினை புயலை கிளப்பியது. திமுக எம்.பி.க்கள்-மத்திய கல்வி அமைச்சர் இடையே விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி.க்கள் நேர்மையாக இல்லை. ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் என்று மந்திரி தர்மேந்திர பிரதான் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரின் பேச்சுக்கு தி.மு.க. மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்கக்கோரி திமுக எம்.பி. கனிமொழி இன்று நோட்டீஸ் அளித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் விவாதம் நடத்த கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கிடையே, தமிழ்நாடு எம்.பி.க்களை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com