செய்திகள்
திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்த பிரபாகரனின் உடல்நிலை, நேற்று மோசமான கட்டத்தை எட்டியது.
கவலைக்கிடமான அவரின் உடல்நிலை குறித்து நேற்று மாலையில் தவறான தகவல்கள் வெளியாகின.
அவருடைய சிகிச்சையை கவனித்துக்கொண்டு வந்த வெங்காயம் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அத்தகவல் தவறானது என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் வேலு பிரபாகரனின் உயிர் பிரிந்தது.
அஞ்சலிக்காக அவரது உடல், வளசரவாக்கம், சிரிகிருஷ்ணா நகர், 21ஆவது தெரு, ஒயிட் அவுஸ் எனும் முகவரியில் வைக்கப்பட்டிருக்கும்.
ஞாயிறு மாலை போரூர் மயானத்தில் நெருங்கிய உறவினர், நண்பர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு :
இராஜாவேலு – 98488 47761
ஜெகதீஷ் – 95977 76288