பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அரசாங்கம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளது. இது சாதாரண மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்கும். இது உங்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

ஜிஎஸ்டி குறித்த பிரதமரின் அறிவிப்பு பற்றி நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, ‘ஜிஎஸ்டி விகிதத்தின் மாற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தனது முன்மொழிவை, மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, இந்த நிதியாண்டுக்குள் பெரும்பாலான சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அறிமுகமாகவுள்ள சீர்திருத்தங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com