வரும் 13ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
Published on

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 13-08-2025 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com