அதிமுக திட்டங்களை காபி – பேஸ்ட் செய்யும் திமுக அரசு!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை காபி - பேஸ்ட் செய்து புதுப்பெயர் சூட்டுகிறார் தமிழக முதல்வர் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல கோடி செலவில் வெற்று விளம்பரம் செய்வதைத்தான் ஃபெயிலிர் மாடல் அரசு என்கிறோம். சொந்தமாக சிந்தித்து மக்கள் தேவை உணர்ந்து திட்டமிடுவோரே தேவை.

என்ன விளம்பரம் செய்தாலும் 2026-ல் ஃபெயிலியர் மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்துக்காக தொடங்கப்பட்டதுதான் தாயுமானவர் திட்டம். சொல்வது ஒன்று செய்வது ஒன்று இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி. அதிமுகவின் நகரும் ரேஷன் கடை திட்டத்தில் தெளிவிருந்தது. உங்கள் திட்டத்தில் தெளிவிருக்கிறதா?

பிப்ரவரி மாதம் 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் ஆட்சி முடியும் தருவாயில் தொடக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை காபி - பேஸ்ட் செய்து புதுப்பெயர் சூட்டுகிறார் முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com