செய்திகள்
தமிழக மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதேபோல், ஒரு மாநிலங்களவை சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கப்படுவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
நடைபெறவிருக்கும் மாநிலங்களை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில் 3 இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும் மற்றுமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கும் ஒதுக்கப்படுகிறது.
திமுக வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள்.” என கூறப்பட்டுள்ளது.