திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி  ஸ்டாலின்
திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின்

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு!

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஜூலை 29ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, டிசம்பர் மாதம் 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, 2வது மாநில மாநாட்டிற்காக திமுக இளைஞர் அணி ஆயத்தமாகி வரும் நிலையில், தற்போது தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு’ சேலத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com