“அந்த விழாவுக்கெல்லாம் போகாதீங்க” – எம்.பி.க்கு அறிவுரை வழங்கிய நீதிபதி!

ரவிக்குமார் எம்.பி. - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
ரவிக்குமார் எம்.பி. - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
Published on

“மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள்” என தனக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வாட்ஸ் மூலம் செய்தி அனுப்பியதாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகப்பத்தில் பகிர்ந்திருப்பதாவது:

“சார், நீங்கள் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது. மாறாக அந்த தோழர்களிடம் அது போன்ற நிகழ்வுகள் எவ்வளவு பிற்போக்குத் தனமானது என்பதை புரிய வைக்கவேண்டும்.

இல்லையென்றால் அவற்றை முகநூலில் பதிவிடாமல் தவிர்க்கலாம்.

தொழிற்சங்கங்களில் இதே பிரச்சினை எனக்கு இருந்தது.ஆனால் மாதர் சங்கத்தின் உதவியுடன் கொஞ்சம் குறைக்க முடிந்தது. மஞ்சள் நீராட்டு விழாவிற்கு எதிராகக் கட்டாயம் கருத்தியல் ரீதியாகப் போராடவேண்டும்.

மஞ்சள் நீராட்டு விழா அந்த குழந்தைக்கே நல்லதல்ல. ஊரைக்கூட்டி அறிவிப்பது மடத்தனம்.”

நீதிபதி கே.சந்துரு அவர்களின் கருத்தை மனதில் கொள்ளுங்கள்.

அரசியல் தளத்தில் வலதுசாரிப் போக்கை எதிர்த்துக்கொண்டு பண்பாட்டுத் தளத்தில் அதை ஊக்குவிப்பது கடைசியில் அரசியலிலும் வலதுசாரிப் போக்கு வலுப்பெறுவதிலேயே சென்று முடியும். எனவே, இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com