ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு!

சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜ்
சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜ்
Published on

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையான இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கண்ணாடி பூவே, கனிமா பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

முக்கியமாக, கனிமா பாடலில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய பகுதிகளை இன்ஸ்டாவில் பலரும் ரீல்ஸ் செய்து பாடலை வைரலாகியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com