தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய சென்னை இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர்ச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, தியாகராயர் நகர், திலக் தெருவில் உள்ள தி அக்கார்டு் டிஸ்டிலரிஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் நான்கு பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் முற்பகல் 11.30 மணிவாக்கில் தேடுதல் சோதனையைத் தொடங்கினர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
அக்கார்டு மதுபான ஆலையில் மது உற்பத்தி தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
ஏற்கெனவே ஜெகத் தொடர்புடைய இடங்களில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் அதன் மதிப்பு 500 கோடி ரூபாய் என்றும் வருமான வரித் துறை சார்பில் அதிகாரபூர்வமாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் அதையொட்டியே அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டதாகவும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.