மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை தமிழில் வெளியிட அமித் ஷா வலியுறுத்தல்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Published on

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை தமிழில் வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

ராணிப்பேட்டையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56ஆவது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் சி.ஐ.எஸ்.எப். தேர்வு தமிழ் உட்பட மாநில மொழிகளில் எழுத முடிகிறது.

மருத்துவம், பொறியியல் படிப்புகளான பாடத்திட்டத்தை விரைவில் தமிழில் வெளியிட தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வளமான கலாசாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் இந்திய கலாசாரத்தை வலுப்படுத்தியுள்ளது.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com