ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் கட்சி வசம் இருந்தது. முதலில் திருமகன் ஈ.வெ.ரா. வென்ற இந்த தொகுதியில், அவரது மறைவுக்கு பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றார். அவர் காலமான நிலையில், இந்த முறை திமுக போட்டியிடுகிறது. தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக- பாஜக போட்டியில் இருந்து ஒதுங்கி, தேர்தலை புறக்கணித்து உள்ளன. திமுக கூட்டணியில் போட்டியிடும் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
சந்திரகுமார் ஆளுங்கட்சி வேட்பாளர் என்பதால் அவருக்கு தான் வெற்றி என்ற சூழலே கள நிலவரமாக உள்ளது.