ஈரோடு கிழக்கு தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர்
Published on

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இந்த முறை காங்கிரசுக்குப் பதிலாக தி.மு.க.வே போட்டியிடுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று இத்தகவலைத் தெரிவித்திருந்தார். 

அதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக அக்கட்சியின் கொள்கைப்பரப்பு இணைச்செயலாளர் சந்திரகுமார் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, முத்துசாமி ஆகியோரும் விவசாய இணைச்செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், ஈரோடு தெற்கு துணைச்செயலாளர் ஆ. செந்தில்குமாரும் உடனிருந்தனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com