ஈரோடு இரட்டைக் கொலை… கொலையாளிகளைப் புடிச்சிட்டோம்... அறிவித்த போலீஸ்!

ஈரோடு இரட்டைக் கொலை… கொலையாளிகளைப் புடிச்சிட்டோம்... அறிவித்த போலீஸ்!
Published on

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, அவரது மனைவி பாக்கியம் இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், கொலை செய்யப்பட்டவர்களின் வீட்டிலிருந்து 12 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், வயதான தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஞானசேகரன், ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் கூறியதாவது:

ராமசாமி, அவரது மனைவி பாக்கியம் இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளி ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அடுத்த 2 பேரை விசாரித்தோம். மரக்கட்டையை கொண்டு இவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர். கையுறையை பயன்படுத்தி உள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்த கால் பாத தடங்களை இவர்களின் பாதங்களுடன் ஒப்பீடு செய்துள்ளோம். கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றனர். உருக்கப்பட்ட 82 கிராம் நகையை ஆட்சியப்பன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம். நகையை உருக்கி கொடுத்து ஞானசேகரன் என்பவரையும் கைது செய்துள்ளோம்

பல்லடம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களுக்காக கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com