திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.
நெல்லை தனித்தமிழ் இயக்கம் கடந்த 63 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்தெடுக்க ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்தி பரிசளித்து வருகிறது.
அந்த வகையில், 2024-2025ஆம் ஆண்டுக்கான கட்டுரைப்போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பேரா. பா. ரவிக்குமாரின் எழுத்தோவியங்கள் எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இலக்கிய கழகத்துக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் முதல் கட்டுரைக்கு ஐம்பதாயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கமும் அவர் பயிலும் கல்லூரிக்கு வெள்ளி உருள்கலனும் அளிக்கப்படும். இரண்டாம் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு மூவாயிரம், இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள தமிழ் நூல்கள் தரப்பட்டும் என கூறப்பட்டுள்ளது.
பரிசு வழங்கும் நிகழ்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் தமிழ்த்திருவிழாவில் வழங்கப்படும் என அக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் பால் வளன் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.