விண்வெளிக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட்!

சுபான்ஷூ சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள்
சுபான்ஷூ சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள்
Published on

இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேருடன் திட்டமிட்டப்படி விண்வெளிக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட்.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். பல்வேறு காரணங்களால் இந்த பயணம் தொடர்ந்து 7 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த சூழலில், இன்று வானிலை 90 சதவீதம் சாதக நிலையில் இருந்ததால், திட்டமிட்டப்படி விண்வெளி வீரர்கள் அனைவரும் விண்கலத்தில் அமர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து, கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் இந்திய நேரத்தின்படி, இன்று மதியம் 12.01 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணிற்கு புறப்பட்டது. அது 36 மணிநேரத்தில் விண்வெளி நிலையம் சென்றடையும் என தகவல் தெரிவிக்கின்றது.

இதன்படி, நாளை மாலை 4.30 மணிக்கு விண்கலம் சென்றடைகிறது. ராக்கெட்டில் இருந்து வளிமண்டலத்திற்கு அப்பால் சென்றதும் டிராகன் விண்கலம் பிரிந்து விடும். இதன்பின்னர், விண்வெளியை அடைந்ததும், பூமியை சுற்றி வரும்.

வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இதில், 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். விண்வெளியில் 7 வித ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார் சுக்லா. விண்வெளியில் பிராணவாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள், பயிர்கள் வளர்ச்சி பற்றிய ஆய்வில் சுக்லா ஈடுபட உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com