பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் வலைத்தள கணக்கு இரண்டு மாதத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு, பிப்ரவரி 13ஆம் தேதி முதல் முடக்கப்பட்டது. இது குறித்து கூறியிருந்த அவர், எக்ஸ் தளத்தை மீட்க மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் இல்லை. அந்த கணக்கின் உள் நுழைய முடியாததால் நீக்கவும் இயலவில்லை. அந்த கணக்கில் இருந்து வரும் எந்த இணைப்பையும் தகவல்களையும் நம்ப வேண்டாம். கணக்கு மீட்கப்பட்டால் தெரிவிப்பேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக இப்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் திரும்ப வந்து விட்டேன்... இனி அடிக்கடி நிறைய எழுத போகிறேன்... பேச போகிறேன்... பிப்ரவரியில் ஹேக்கிங் செய்யப்பட்ட என்னுடைய எக்ஸ் கணக்கு பல இடைஞ்சல்களுக்குப் பிறகு எக்ஸ் குழுவினரின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்தும் நன்றாகவே இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னைப் பற்றிய தவறான சில கட்டுரைகள், விளம்பரங்கள், எஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என என் கணக்கில் வெளியாகின. வரும் காலங்களில் இவற்றையெல்லாம் தடை செய்யும் விதமாக எக்ஸ் நிர்வாகம் விதிமுறைகளை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.. விரைவில் அவர்கள் இதை செய்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.