வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பேருந்தின் பின்னால் ஓடிச் சென்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சுஹாசினிக்கு கடுக்கா படக்குழுவினர் ஸ்கூட்டியை பரிசாக வழங்கியுள்ளனர்.
எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் விஜய் கெளரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடுக்கா. இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் போஸ்டர்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடுக்கா திரைப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஸ்ருதி நாராயணனும், வாணியம்பாடி மாணவி சுஹாசினியும் போஸ்டர்களை வெளியிட்டு சிறப்பித்தனர்.
பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் தேர்வு அன்று பேருந்து பின்னால் ஓடிச்சென்று, 437 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவி சுஹாசினிக்கு, கல்லூரி செல்வதற்காக கடுக்கா படக்குழுவினர் ஸ்கூட்டியை பரிசாக வழங்கியுள்ளனர். ஏழை மாணவிக்கு உதவிய படக்குழுவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.