‘மீனவர்கள் பிரச்னை தீர…’ வைகோ கூறிய தீர்வு!

வைகோ
வைகோ
Published on

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்க, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு மத்தியில் தமிழக மீனவர்கள் பிரச்னையை மதிமுக தலைவர் வைகோ எழுப்பினார். அவர் பேசியதாவது:

”தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் 150 க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் கைது மற்றும் தாக்குதலால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து திரும்பப் பெற வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com