செய்திகள்
புதிய வருமான வரி சட்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் 1961ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதில் பல ஆண்டுகளாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி இன்று மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை (2025) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளது.