காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக துட்டு வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கி, ஆசி வழங்கினார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70ஆவது மடாதிபதி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதிக்கு தீட்சை வழங்கும் நிகழ்வு இன்று காலை 5:30 மணிக்கு தொடங்கியது. அறிவித்தபடி கணேச சர்மா 6:30 மணிக்கு தீட்சை பெற்றார். அவருக்கு விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கி, பிறகு காவி உடை அணிவித்தார்.
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னர் வேத மந்திரம் முழங்க காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களின் இருந்து வந்த பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.