‘பாகிஸ்தானுக்கு போய்டுங்க’ – ரஜினி பட இயக்குநருக்கு கடும் எதிர்ப்பு!

ஞானவேல்
ஞானவேல்
Published on

பெகல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் தெரிவித்த கருத்துக்கு, கடுமையான எதிர்வினைகள் வரத்தொடங்கியுள்ளன.

‘டூரிஸ்ட் ஃபேமிலி‘ திரைப்படத்தின் விழாவில் பேசிய இயக்குநர் ஞானவேல், “போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது. அது என்ன அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று தெரியாது. போருக்கான அடிப்படை அறத்தை மீறக்கூடாது. பெண்கள், நோயாளிகள், கால்நடைகள் அப்புறப்படுத்திவிட்டு தான் போரை அறிவிக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுலா தளத்தில் பாதுகாப்பில்லை, மருத்துவத்துக்காக வந்த பாகிஸ்தானிய குழந்தையை 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்ற துரதிர்ஷ்டமும் அதில் வருகிறது. ஒரு விளைவு மற்றொரு விளைவை ஏற்படுத்துகிறது.

போரால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான அதிர்வுகளின் பாதிப்புகள் அதிகம். போர் பற்றிய வலிகளை இப்படம் சொன்னாலும் நகைச்சுவையாக கதை எடுக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

இயக்குநர் ஞானவேல் பேசிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலான நிலையில், “தீவிரவாதிகள் தாக்குதலில் உன் குடும்பத்தை சேர்ந்தவன் உயிரிழந்தால் அதனுடைய வலி உனக்கு புரியும்.” என்றும், “ஞானவேல் பேசாமல் பாகிஸ்தான் போய் ஒரு ஆறு வருடம் வாழ்ந்துட்டு வந்து சொல்லட்டும்.” என அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com