ஒரேநாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,480 அதிகரிப்பு!

gold rate
தங்கம் விலை (மாதிரிப்படம்)
Published on

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் 67,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,285 ரூபாய்க்கும், சவரன், 66,280 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 8,225 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 65,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ. 8290க்கும், ஒரு சவரன் ரூ.66,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. மதியம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. ஒரு சவரன் 67,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ரூ.8,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஓரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com