நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார்.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவிருக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிலையில் தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொள்கிறார்.

இதற்காக இருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்துள்ளார். அப்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி உடனிருந்தார்.

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை உடனே விடுவிக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com