துணைவேந்தர்களை அரசும் காவல் துறையும் மிரட்டியுள்ளது –ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி
Published on

துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல் துறையும் மிரட்டியுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றிருக்கிறார்.

இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, " கல்வி வளர்ச்சி, உயர் கல்வி மேம்பாடு போன்ற நல்ல நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படும் இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலரையும் பங்கேற்க விடாமல் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியிருக்கிறது. துணை வேந்தர் ஒருவரின் வீட்டிற்கேச் சென்று மிரட்டியிருக்கிறார்கள். மற்றொரு துணை வேந்தரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர். இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த மாநாட்டில் அதிக அளவு துணை வேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளின் கல்வியின் தரம் மிக மோசமாக உள்ளது.

நேரில் சென்று நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே இந்த மாநாட்டை நடத்துகிறேன்." என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com