அரசின் உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சட்டப்பேரவையிலிருந்து வெளியேறும் ஆளுநர் ஆர். என். ரவி
சட்டப்பேரவையிலிருந்து வெளியேறும் ஆளுநர் ஆர். என். ரவி
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறப்பட்டு சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, ஆளுநர் ரவி கூட்டத்தொடரை புறக்கணித்தார்.

முன்னதாக, சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவிக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்த்த வந்த ஆளுநர், தன் உரையின் முதல் பக்கத்தில் உள்ளதை படித்து விட்டு, சில கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com