ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிகளும், தவெகவும் புறக்கணித்துள்ளன.
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், , எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் தேநீர் விருந்தில் அதிமுக , பாஜக , பாமக , தேமுதிக , தாமாக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
அதிமுக சார்பில் இன்பதுரை எம்.பி., பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் , தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா, அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் , தமாகா சார்பில் ஜிகே வாசன் , தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் பங்கேற்றுள்ளனர்.
மேலும் தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் முருகானந்தம் , டிஜிபி சங்கர் ஜிவால், மாநகர் காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளும் தவெகவும் புறக்கணித்துள்ளன.