வெள்ள கண்காணிப்பு செயலி
வெள்ள கண்காணிப்பு செயலி

வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே கணிக்கும் செயலி அறிமுகம்!

வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், ‘வெள்ள கண்காணிப்பு’ என்ற செயலியை மத்திய நீர்வளத் துறை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை அதிக இழப்பை ஏற்படுத்துவதோடு மனித உயிர்களையும் காவு கொள்கின்றன. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும்வகையில், வெள்ள நிலவரம் பற்றி உடனுக்குடன் எச்சரிக்கும் வகையில் வெள்ள கண்காணிப்பு (Flood Watch) என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் குஷ்விந்தர் வோரா கூறுகையில்,‘‘ நாட்டில் உள்ள 338 நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும். வெள்ளம் தொடர்பான தகவல்களை செல்போன் மூலம் தெரிந்துகொள்ளலாம். 7 நாள்கள்வரையிலான கணிப்புகள் வெளியிடப்படும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த தகவல்கள் வழங்கப்படும். எச்சரிக்கைகள், கணிப்புகள் ஆகியவை எழுத்து வடிவிலும், ஆடியோ வடிவிலும் வெளியிடப்படும். தற்போது ஆங்கிலம், இந்தி மொழிகளில் இது வெளியிடப்படுகிறது. இனி அனைத்து மாநில மொழிகளிலும் வெளியாகும்.” என்றார்.

இந்த வெள்ள கண்காணிப்பு செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியில் பச்சை நிற வளையம் காட்டினால், இயல்பான நிலை. மஞ்சள் நிற வளையம் காட்டினால், இயல்பை விட அதிகம். ஆரஞ்சு நிற வளையம் காட்டினால் கடுமையான நிலை, சிவப்பு நிற வளையம் காட்டினால் தீவிரமான நிலையைக் குறிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com