சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் ஆணை!

சிவாஜி அன்னை இல்லம்
சிவாஜி அன்னை இல்லம்
Published on

நடிகர் சிவாஜிகணேசனின் பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனைக் கட்டாததால் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

துஷ்யந்த் சார்பில் அவரின் படத் தயாரிப்பு நிறுவனம், ஜகஜ்ஜால கில்லாடிகள் எனும் படத்தைத் தயாரித்தது. அதற்காக கடன் கொடுப்பவர் ஒருவரிடம் 3.74 கோடி ரூபாயைக் கடனாக வாங்கியிருந்தது. 

வட்டியுடன் சேர்த்து 9.39 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய நிலையில், துஷ்யந்த் அதைக் கட்டவில்லை. இதனால் அந்த கடன்கொடுப்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

அதில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கடனுக்குப் பதிலாக சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது. 

இதனால், சிவாஜி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com