செய்திகள்
பெகல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நமது ராணுவத்தினரை நினைத்து பெருமைப்படுகிறேன். பெகல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்து ஒழிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கு பா.ஜ.க. அரசு பதிலடி கொடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.