சீமான்
சீமான்

‘மோடி தமிழ்நாட்டில் நின்றால் எனக்கு விடிவுகாலம் வரும்!’ – சீமான் சவால்

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அவர் நிற்கும் தொகுதி தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவும் சூழலில், மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்கிறார்கள். இதை அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் சவால் விடுத்துள்ளார்.

காயல் பட்டினம் திருமண விழா ஒன்றில் பேசிய சீமான், “நான் பேசுவதையெல்லாம் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை. நிறைய உங்களுக்காகத்தான் (இஸ்லாமியர்கள்) பேசியிருக்கிறேன். ஒருவேளை மோடி தமிழ்நாட்டில் நின்றால் எனக்கு விடிவு காலம் வரும். ஏனெனில், அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அன்னைக்கு என்னை நம்புவீர்கள். மோடிக்கு உண்மையிலேயே நான் நெருக்கடியை ஏற்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம்.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com