“அந்த சார் யார் என தெரிந்தால் சொல்லுங்கள்” - எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் சவால்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

“அந்த சார் யார்? என அதிமுகவுக்கு தெரிந்தால், அதனை விசாரணை ஆணையத்தில் சொல்லுங்கள்" என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடந்தது.

விவாதத்தின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சென்னையில் மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை மாபெரும் கொடூரம், அதனை யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. அரசியல் கட்சிகளுக்கு எந்த நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அரசு உறுதியாக இருக்கும்.

குற்றம் நடந்ததும், குற்றவாளியை கைது செய்யாமல் விட்டுவிட்டால், அவரை காப்பாற்ற முயன்றால் அரசை எதிர்க்கட்சிகள் குறை சொல்லலாம். ஆனால், அரசு குற்றவாளியை கைது செய்துள்ளது, ஆதாரங்களை சேகரித்துள்ளது. இதற்குப்பின்னும் அரசின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது எதனால்?.

சென்னை மாணவி டிசம்பர் 24, 2024 அன்று பிற்பகல் நேரத்தில் கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. மறுநாள் காலையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இது துரிதமான காவல்துறை நடவடிக்கை. முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு இருக்கிறது. சம்பவம் நடந்த வளாகத்தில் சுற்றியிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

குற்றவாளி கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்ந்து இருந்தால் கவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

சிறப்பு புலனாய்வு குழு தற்போது விசாரணை நடத்தப்படுகிறது. 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

அந்த சார் யார்? என எதிர்க்கட்சிக்கு தெரிந்தால், அதனை விசாரணை ஆணையத்தில் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு மலிவான அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பின்மை இருப்பதாக மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பெண்களுக்கு எதிரான 80 சதவீத வழக்குகளில் 60 நாள்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறோம். சத்யா என்ற மாணவியை ரயிலின் முன் தள்ளி விட்டவருக்கு தூக்கி தண்டனை வாங்கிகொடுத்திருக்கிறது இந்த அரசு.

பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு முன்னெடுத்த விஷயங்களை பாராட்ட மனமில்லை என்றாலும் வீண் பழிசுமத்தாமல் இருந்தால் போது

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக பிரமுகர்கள் அதிகம் கைது செய்யப்பட்டனர். இந்த விசயம் சிபிஐ விசாரணையில் வெளிவந்தது. பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி என அன்றே நான் கூறி இருந்தனர்.

பெண்களுக்கு எதிராக ஆட்சி நடத்திய சார், இன்று பேட்ச் அணிந்து வந்து ஏமாறுகிறார்கள். இதுபோல 100 சார் கேள்விகளை என்னால் கேட்க இயலும். முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் பேட்ச் அணிந்து வந்து, அரசியலில் தாழ்வு நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

பொள்ளாச்சியில் 12 நாட்கள் கடந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சென்னையில் ஒரு நாளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பெண்களின் பாதுகாப்பு எங்களால் உறுதி செய்யப்படும். ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை. பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் செயல்படுங்கள்" என பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com