குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்a அஜித் – த்ரிஷா நடிப்பில் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில், இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ ஆகிய மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட 3 பாடல்களுக்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். மேலும், 3 பாடல்களை பயன்படுத்துவதை நிறுத்தவும் 7 நாள்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படியும் கூறப்பட்டுள்ளது.