ரஜினி நடிக்கும் கூலி படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

கூலி ரஜினி
கூலி ரஜினி
Published on

ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே இந்த படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகிற இந்த மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com