மதகஜராஜா படத்துக்கு திரையரங்குகள் அதிகரிப்பு!

மதகஜராஜா திரைப்படம்
மதகஜராஜா திரைப்படம்
Published on

மதகஜராஜா படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா. பல்வேறு பிரச்சினைகளை கடந்து 12 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு யாருமே எதிர்பாராத விதமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிகளில் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளானது. இதனால் இப்படம் தான் 2025ஆம் ஆண்டு முதல் வெற்றியாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள்.

கேம் சேஞ்சர், வணங்கான் மற்றும் மெட்ராஸ்காரன் ஆகிய படங்களை விட மதகஜராஜா படத்துக்கு தான் விநியோகஸ்தர்கள் முன்னுரிமைக் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். மேலும் காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா மற்றும் தருணம் ஆகிய படங்களுக்கு குறைந்த அளவில் தான் திரையரங்குகள் கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. அந்தளவுக்கு பி மற்றும் சி சென்டர்களில் மதகஜராஜா படத்துக்கு தான் முன்னுரிமை என்பது தெளிவாகிவிட்டது.

சோனு சூட், மறைந்த இயக்குநர் மணிவண்ணன், மறைந்த இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா, சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட விஷாலுடன் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தினை ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது. அனைத்து பிரச்சினைகளை கடந்து இப்படத்தின் வெளியீட்டுக்கு துணையாக நின்றவர் திருப்பூர் சுப்பிரமணியம் தான் என்கிறார்கள் திரையுலகில்.

logo
Andhimazhai
www.andhimazhai.com