19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிருக்கான இருபது ஓவர் உலக்கோப்பை தொடரை தொடர்ந்து 2 ஆவது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது இந்திய அணி. இதையொட்டி இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 11.2 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஜெமா போதா 16 ரன்களும், மைக் வான் வூர்ஸ்ட் 23 ரன்களும், ஃபே கோலிங் 15 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் கோங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகளையும், ஆயுஷி ஷுக்லா, வைஷ்ணவி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய 11.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்திய அணி தரப்பில் கோங்கடி த்ரிஷா 33 பந்துகளில் 44 ரன்களும், சனிகா சால்கே 22 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.