இந்தியா குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதற்காக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் மற்றும் சின்ஹூவா செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் இந்தியா – சீனா இடையேயான மோதல் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சீனா அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் மற்றும் சின்ஹூவா செய்தி நிறுவனங்களின் எக்ஸ் கணக்குகளை மத்திய பாஜக அரசு முடக்கியுள்ளது. தவறான தகவல்களை வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குளோபல் டைம்ஸ் என்பது சீன அரசு நடத்தும் பத்திரிகை. இது கடந்த 7ஆம் தேதி, இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு சீனாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, தவறான தகவல்கள் பரப்பிய 8 ஆயிரம் கணக்குகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கணக்குகளை எக்ஸ் நிறுவனம் முடக்கத் தொடங்கியது.
அந்தவகையில் இந்தியா குறித்து ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்ட குளோபல் டைம்ஸ் மற்றும் சின்ஹூவா செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.