மகளிர் டி20 உலக கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி
Published on

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான இருபது ஓவர் உலக கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்றுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாட உள்ளது.

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக கோப்பையின் அரை இறுதி ஆட்டம் கோலாலம்பூர் உள்ள பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பேட் செய்தது.

இங்கிலாந்து அணிக்காக 4 ஓவரில் 37 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் டேவினா பெரின், ஜெமிமா ஸ்பென்ஸ் ஜோடி. இருப்பினும் பருணிகா சிசோடியாவின் பந்துவீச்சில் ஜெமிமா விக்கெட்டை இழக்க, அது இந்தியாவுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து ஆட வந்த வீரங்கனைகளும் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்தியாவின் தொடக்க வீராங்கனை கொங்கடி திரிஷா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கமாலினி அதிரடியாக ஆடி 56 ரன்களுடனும் சனிகா சால்கே 11 ரன்களும் அடித்து இந்திய அணி வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன் மூலம், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 ஓவர் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்த பருணிகா சிசோடியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com