இந்தியா – இலங்கை: கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?

பிரதமர் மோடி  - இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்கா
பிரதமர் மோடி - இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்கா
Published on

இந்தியா - இலங்கை இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக்கவை நேற்று (ஏப்ரல் 5) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தியா – இலங்கை இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

1. இந்தியா - இலங்கைக்கு இடையிலான எரிசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி புரிந்துணர்வு உடன்படிக்கை.

2. இந்தியா - இலங்கைக்கு இடையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.

3. இந்தியா - இலங்கை - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில் திருகோணமலை எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.

4. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை.

5. கிழக்கு மாகாணம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை

6. இலங்கை - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுகாதாரம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.

7. இந்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இந்திய மருந்தியல் ஆணையமும் இலங்கை அரசின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையமும் மருந்தியல் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com