மும்பையில் ராகுல் காந்தி பேட்டி
மும்பையில் ராகுல் காந்தி பேட்டி

அதானி புது சர்ச்சை : பிரதமர் அமைதிகாப்பது ஏன்? - ராகுல் சரமாரி கேள்வி!

அதானி குழுமத்தின் மீதான புதிய குற்றச்சாட்டு குறித்து பிரதமரின் அமைதிகாப்பது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி

மும்பையில் இதுகுறித்து இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தி பினான்சியல் டைம்ஸ், தி கார்டியன் ஆகிய சர்வதேச ஊடகங்களில் இன்று வெளியான அதானி குழுமம் பற்றிய செய்திகளைக் காட்டிப் பேசினார். 

”அந்த இரண்டு ஊடகங்களுமே முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளன என்றும் இந்தியாவிலிருந்து நூறு கோடிக்கணக்கான டாலர் பணம் பல வெளி நாடுகளுக்குச் சென்றுள்ளது;  மீண்டும் இந்தியாவில் அது முதலீடு செய்யப்பட்டுள்ளது. யாருடைய பணம் இது? அதானியின் பணமா இது? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்... கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி. நாசர் அலி சபான் அலி, சாங் சிங் லிங் என மேலும் இருவரும் வெளிநாட்டவர் இருக்கிறார்கள். ”என்றும்,

“நாட்டின் பெரும்பாலான உள்கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனத்தில் இவர்களின் பங்கு என்ன? ஏதோ இதில் தவறு நடந்திருக்கிறது. பிரதமருக்கு நெருக்கமான ஒருவர், பங்குச் சந்தையில் நூறு கோடிக்கணக்கான டாலர் பணத்தை முதலீடு செய்யப்படுவது எப்படி? பிரதமர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்.ஆனால் அவர்ஏன் இதில் அமைதியாக இருக்கிறார்?. ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அந்த நாடுகளின் தலைவர்கள் எல்லாரும் இப்படியொரு சிறப்பான நிறுவனம் பற்றி கேள்வியை எழுப்புவார்கள். ” என்று ராகுல் காந்தி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com