மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

ஆந்திர ரயில்விபத்து: ’காற்றோடு போன மோடி அரசின் வாக்குறுதிகள்’- கார்கே

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே நேற்று நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி தலைமையிலான அரசாங்கம் இரயில் பாதுகாப்பு தொடர்பாக அளித்த வாக்குறுதிகளைக் குறைகூறினார். 

“தொடர்வண்டிகளைக் கொடியசைத்துத் தொடங்கிவைப்பதிலும் ஆரவாரம் செய்வதிலும் காட்டும் ஆர்வத்தை கோடிக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பிலும் செலுத்தவேண்டும். பாலாசூர் இரயில்விபத்தை அடுத்து மைய அரசு அளித்த பாதுகாப்பு வாக்குறுதிகள் அனைத்தும் காற்றோடு காற்றாகப் போய்விட்டன.” என்றும் கார்கே தன் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com