சோனியா
சோனியா

இராஜஸ்தானிலிருந்து சோனியா போட்டி... ஏன்?

முதல் முறையாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ராஜஸ்தானைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது கேள்வியை எழுப்பியுள்ளது. 

ஐந்து முறை மக்களவை உறுப்பினரான சோனியா, முதன்முதலில், வரும் 27ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபிசேக் சிங்வி, இமாச்சலப்பிரதேசத்திலிருந்து போட்டியிடுகிறார். அங்கு காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருப்பதால் அவருடைய தேர்வு எளிதாக இருக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. கடந்த முறை அவர் மேற்குவங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவு அளித்தது.

முன்னதாக, சட்டப்பேரவைத்தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த தெலங்கானா, இமாச்சல் ஆகியவற்றுடன் ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் மாநிலத் தலைமைகள் சோனியாவை தங்கள் மாநிலத்திலிருந்து போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், சோனியா ராஜஸ்தானையே தேர்ந்தெடுத்தார். காரணம், அக்கட்சியின் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம்ரமேஷ் ஆகியோர் தென்னிந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்; அவர்களோடு சோனியாவும் சேர்ந்துவிட்டால் எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரச்சாரத்துக்கு பலியாக நேரிடும் என்பதற்காகவே, அவர் இம்முடிவை எடுத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சோனியா முதலில் 1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரி, உ.பி.யின் அமேதி இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அமேதியில் மட்டும் தொடர்ந்தார். 2004 தேர்தலில் ராகுல் போட்டியிடுவதற்காக அங்கிருந்து ரேபரேலி தொகுதிக்கு சோனியா மாறினார். அண்மைக்காலமாக அவரால் தொகுதிப்பணிகளைச் சரிவர செய்யமுடியவில்லை.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com