இராமோஜி ராவ்
இராமோஜி ராவ்

இராமோஜி ராவ் 87 வயதில் காலமானார்!

ஈநாடு பத்திரிகை குழுமம், ஐதராபாத் இராமோஜி ராவ் திரைப்பட நகரம் ஆகியவற்றை நிறுவிய இராமோஜி ராவ் ஐதராபாத்தில் இன்று காலமானார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று அதிகாலை 3.45 மணியளவில் உயிரிழந்தார். 

1936ஆம் ஆண்டு ந்வம்பர் 16ஆம்தேதி பிறந்த இராமோஜி, ஊடகத் துறையில் கால்பதித்தார். தொழில்முனைவோராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தவர், ஈநாடு பத்திரிகை, ஈநாடு தொலைக்காட்சிகளையும் உஷா கிரண் மூவிஸ் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் பெருமளவில் வளர்த்தெடுத்தார். 

மேலும், மார்க்கதர்சி சிட் பண்டு, டால்பின் ஓட்டல் குழுமம், கலாஞ்சாலி ஷாப்பிங் மால், பிரியா ஊறுகாய், மயூரி திரைப்பட விநியோகஸ்தர் என வெவ்வேறு தொழில்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். 

அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com