தில்லி விமானநிலையத்தில் வந்திறங்கியவர்களை வரவேற்ற அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்
இந்தியா
இஸ்ரேலிலிருந்து 212 இந்தியர்கள் நாடுதிரும்பினர்!
இஸ்ரேல் போரில் அகப்பட்டுக்கொண்ட இந்தியரை மீட்க அனுப்பப்பட்ட விமானத்தின் மூலம் 212 பேர் இன்று காலை நாடுதிரும்பினர். ஆப்பரேசன் அஜய் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின்படி, ஒரு கைக்குழந்தை உட்பட 212 இந்தியர்கள் இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்திலிருந்து வியாழன் இரவு இந்திய விமானம் புறப்பட்டது. முதல் வருவோருக்கு முன்னுரிமை என்கிறபடி நாடுதிரும்புவோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலையில் வந்திறங்கிய அனைவரையும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமானநிலையத்தில் வரவேற்றார்.