பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

உதயநிதிக்கு உரிய பதிலடி; மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

உதயநிதிக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கடந்த 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் எதிர்க்க வேண்டியது அல்ல; ஒழிக்க வேண்டியது என பேசியது, அரசியலில் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,‘சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், இந்தியா - பாரத் சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமானவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“வரலாற்றுக்குச் செல்ல வேண்டாம். ஆனால், அரசியலமைப்பின் படி உண்மைகளைப் பேசுங்கள். சனாதனம் குறித்த தற்கால பிரச்னைகளை குறித்துப் பேசுங்கள்” என்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com