கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் பொதுச்செயலாளர்
கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் பொதுச்செயலாளர்

எதிர்க்கட்சித் தலைவராக இராகுல் காந்தி- காங். செயற்குழு தீர்மானம்!

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இராகுல்காந்தி முன்னிறுத்தப்பட்டுள்ளார். 

தில்லி, அசோக் ஓட்டலில் இன்று கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பின்னர், செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இதைத் தெரிவித்தார்.

“தேர்தலில் நாங்கள் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமூகநீதி, பெண்களின் பிரச்னைகள் போன்ற முக்கியமான பிரச்னைகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்தோம். நாடாளுமன்றத்தில் இவற்றை முன்னைவிட வீச்சாகப் பேசவேண்டும். அதற்குத் தகுதியானவர் இராகுல்காந்திதான். எனவே, அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” என்று வேணுகோபால் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com