அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளை பழிவாங்க ஏவப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கும் நிலையில், மராட்டிய மாநிலத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் 2024 தேர்தலை எதிர்கொள்ளும்பொருட்டு பரபரப்பாக ஒன்றுகூடி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தன. இந்த விஷயம் தேசிய தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்த நிலையில், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கிரித் சோமையாவின் ஆபாச வீடியோ மராத்தி தொலைக்காட்சிகளில் திடீரென்று வெளியானது.
லஞ்சம் ஊழிலில் ஈடுபடும் அரசு பெண் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பதும் அவர்களை மிரட்டி பணியவைத்து தன் இச்சைக்கு பயன்படுத்துவதையும் பாஜக தலைவர் கிரித் சோமையா, வாடிக்கையாக செய்துவந்துள்ளார். அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்வேன் எனக் கூறிய தனக்கு வேண்டியதை சாதித்துள்ளார் இந்த அரசியல்வாதி.
மேலும், அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம், பல்வேறு அரசியல் கட்சிகளை அச்சுறுத்தி வந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய் வழக்குகளை பதிவு செய்து ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை விசாரிக்கக் கூறி கிரித் சோமையா பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கிரித் சோமையாவுக்கு எதிராக, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்ததையடுத்து, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என மராட்டிய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் கிரித் சோமையா குறித்து அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளியாகி மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இந்த வீடியோவை வெளியிட்டு பாஜகவுக்கு அவப்பெயரை உண்டாக்கிய லோக்ஷாஹி மராத்தி தொலைக்காட்சி சேனலை பாஜக கூட்டணி அரசு முடக்கியுள்ளது.
இதன் மூலம் பா.ஜ.க தனது உண்மையை மறைக்க பார்க்கிறது என தொலைக்காட்சி முடக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.