தலைமைத் தேர்தல் ஆணையர்
தலைமைத் தேர்தல் ஆணையர்

ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் - ஜூன் 4இல் வாக்கு எண்ணிக்கை!

மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

தலைமைத் தேர்தல் ஆணையர் புதுதில்லி விஞ்ஞான் பவன் கட்டடத்தில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஞானேஸ்குமார், சுக்பீர் சாந்து ஆகியோரும் உடனிருந்தனர்.

அப்போது, தேர்தல் தொடர்பான பல்வேறு விவரங்களுடன், தேர்தல் அட்டவணையையும் வெளியிட்டார்.  

ஏப்ரல் 19இல் முதல் கட்ட வாக்குப்பதிவும்,

ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும்,

மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும்,

மே13இல் நான்காம் கட்ட வாக்குப்பதிவும்,

மே 20 அன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவும்,

மே 25இல் ஆறாம் கட்ட வாக்குப்பதிவும்,

ஜூன் 1 அன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும்.

ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் மேலும் கூறுகையில், ”நாட்டில் மொத்தம் 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களில் 48 ஆயிரம் திருநர்கள், 47.1 கோடி பெண்கள், 49.7 கோடி ஆண்கள்.1.82 கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். 10.5 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 55 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.” என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com