ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி
ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி

ஐ.நா. விதிகளின்படி உக்ரைனில் அமைதி : ஜி-20 மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம்!

உக்ரைன் போரால் சர்வதேச அளவுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்றும் ஐ.நா. விதிகள், உடன்படிக்கைகளின்படி அமைதித் தீர்வு காணவேண்டும் என்றும் ஜி-20 மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரே முடிவுக்கு வரமுடியவில்லை. இந்தக் கூட்டத்திலும் இந்திய அரசு முன்வைத்த கருத்துருவில் ஒரு பத்தியை பல நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதை மாற்றிய பிறகே இந்த விவகாரத்தில் ஏகமனதான தீர்மானத்துக்கு அந்த நாடுகள் ஒப்புக்கொண்டன என்றும் டெல்லி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்தியா முன்வைத்த தீர்மானம் இறுதி செய்யப்பட்டிருப்பதற்காக பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com