இந்தியா
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே வாக்கில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர், பள்ளி பொதுத்தேர்வுகளை முடிக்கவேண்டும் எனவும் மைய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் மைய அரசின் கல்வித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15இல் தொடங்கி மார்ச் 13ஆம் தேதிவரை பொதுத்தேர்வுகள் நடைபெறும்.
சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதிவரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.